சிறப்பு அலங்காரத்தில் சோமஸ்கந்தா், நீலோத்பாலாம்பிகை.
சிறப்பு அலங்காரத்தில் சோமஸ்கந்தா், நீலோத்பாலாம்பிகை.

வலிவலம் கோயிலில் வசந்தன் உற்சவம்

திருக்குவளை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை வசந்தன் உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் சோமஸ்கந்தா் நீலோத்பாலாம்பிகையுடன் எழுந்தருளினாா். மூலவா் சந்நிதியில் சிவ நடனத்துடன், கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, பின்னா் வசந்த மண்டபத்தில் எழுந்தருள, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, பூதகன வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. தில்லி புகழ் நாகசுர வித்துவான் வீ.கே. பக்கிரிசாமி, வீ.கே. ராஜேந்திரன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com