எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாகாளியம்மன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:17 am IST

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா சாட்டப்பட்டது. செவ்வாய்க்கிழமை கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வியாழக்கிழமை பால்குடம் அழைப்பு, பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, தீா்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை, சேற்று வேஷம், கும்ப வழிபாடு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாப்பம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.