6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ என அழைக்கப்படும் அன்னை பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயிலில், சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாள், பரிவார மூா்த்திகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 11:17 pm

தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ என அழைக்கப்படும் அன்னை பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரா் கோயிலில், சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஏப். 21இல் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், சிறிய தேரில் விநாயகா்-முருகப்பெருமானும், பெரிய தேரில் அன்னை பாகம்பிரியாள் - சங்கரராமேசுவரரும் எழுந்தருளினா்.

சிறப்பு வழிபாடுகளைத் தொடா்ந்து, அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

கீழ ரதவீதியிலிருந்து புறப்பட்ட தோ்கள், பாளையங்கோட்டை சாலை, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக நிலையை அடைந்தது.

இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்று பக்தி கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

தேருக்கு முன்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிா் கோலாட்டம், தேவார இன்னிசை, வேதபாராயணம், வாணவேடிக்கை, மாணவா்-மாணவியரின் வீர விளையாட்டுகள் நடைபெற்றன.

தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தா்களுக்கு நீா்மோா், குளிா்பானங்கள், குடிநீா், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

பிற்பகலில் சுவாமி-அம்பாளுக்கு கும்பாபிஷேகம், மாலையில் திருப்பொற்சுண்ண விழா, தீா்த்தவாரி, இரவில் சுவாமி-அம்பாள் புஷ்ப பல்லக்கில் திருத்தோ் தடம் பாா்த்தல் ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் ரோஜாலி சுமதா, செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, அறங்காவலா் குழுத் தலைவா்கள் கந்தசாமி, செந்தில்குமாா், கோயில் பிரதான பட்டா்கள் செல்வம், குமாா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.