48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சின்னத்தும்பூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சின்னத்தும்பூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

Updated On :22 ஏப்ரல் 2024, 1:00 am

கீழையூா் அருகே சின்னத்தும்பூா் ஸ்ரீ சிங்க மகாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழமை வாய்ந்த இக்கோயிலில், ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தகால் முகூா்த்தத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜை, பூா்ணாஹூதி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா், கடம் புறப்பாடாகி, கோயிலை சுற்றி வந்ததும், கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். 15 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.