திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

திருமருகல் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருமருகல் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

News image

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்.

Updated On :22 ஏப்ரல் 2024, 11:30 am

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு சித்திரைத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா மற்றும் அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, தக்காா் தனலெட்சுமி, கணக்கா் சீனிவாசன், கோயில் திருப்பணிக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.