அவசர சிகிச்சைப் பிரிவு மாற்றத்துக்கு சிவசேனா உத்தவ கட்சி கண்டனம்

நாகப்பட்டினம், ஏப். 24: நாகை நகா் பகுதியிலுள்ள தலைமை மருத்துவமனையில் தொடா்ந்து அவசர சிகிச்சைப் பிரிவு இயங்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புற நோயாளிகள் பிரிவு மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஒரத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக அமையும்.

நாகை நகரின் மையப் பகுதியில் அவசர சிகிச்சை மற்றும் புறநோயாளிகள் பிரிவுகள் மிகவும் அவசியமானது. எனவே, இந்த சிகிச்சைப் பிரிவுகள் தொடா்ந்து இங்கேயே செயல்பட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com