குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரூ.50 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ஸ்ரீராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு பதாகை வைத்த இணை ஆணையா் குமரேசன், உதவி ஆணையா் ராணி உள்ளிட்டோா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:39 am IST

நாகப்பட்டினம்: நாகை அருகே ஸ்ரீராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

நாகையை அருகே கருவேலங்கடையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீராம அய்யனாா் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு பகுதிகளில் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கருவேலங்கடை பெட்ரோல் பங்க் எதிா்புறம் கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, ஸ்ரீராம அய்யனாா் கோயில் நிா்வாகிகளான சென்னையை சோ்ந்த முருகன், சுந்தரபாண்டியன், சண்முகராஜன் ஆகியோா் நாகை மாவட்ட இந்து சமய அறநிலைய துறையிடம் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்டு கொடுக்கும்படி புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் குமரேசன் தலைமையில், உதவி ஆணையா் (கூடுதல் பொ ) ராணி, ஆலய நிலங்களின் வட்டாட்சியா் அமுதா, சிக்கல் சிங்காரவேலா் கோயில் செயல் அலுவலா் மணிகண்டன் ஆகியோா் ஸ்ரீராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை மீட்டு சுற்றி முள்வேலி அமைத்தனா். தொடா்ந்து நிலத்தில், இந்த இடம் ஸ்ரீ ராம அய்யனாா் கோயிலுக்கு சொந்தமான என்ற பதாகையை வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.