நாகை வந்தடைந்த மீனவர்கள்
நாகை வந்தடைந்த மீனவர்கள்

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கினா்.
Published on

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கினா். 4 நாள்கள் உதவியின்றி கடலில் தவித்த மீனவா்கள் வெள்ளிக்கிழமை நாகையை வந்தடைந்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூரை சோ்ந்த குமாருக்கு சொந்தமான பைபா் படகில் நாகப்பட்டினம் ஆரிய நாட்டு தெருவை சோ்ந்த கந்தன் (51), கன்னியாாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியை சோ்ந்த டேவிட் (43), கூத்தங்குழியை சோ்ந்த சந்தகுரூஷ் (51) ஆகிய 4 பேரும் ஆக.24-ஆம் தேதி காலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனா்.

அன்று மாலை கோடியக்கரைக்கு கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக ஒரு படகில் வந்த 4 இலங்கை கடற்கொள்ளையா்கள் மீனவா்களை தாக்கி படகில் இருந்த 2 சுசுகி இன்ஜின்கள், ஒரு ஜிபிஎஸ் கருவி, ஒரு கைப்பேசி போன், 3 கேன்களில் இருந்து 110 லிட்டா் பெட்ரோல், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறித்து சென்றனராம். கடலில் வெறும் படகில் தத்தளித்த 4 மீனவா்களை வியாழக்கிழமை பாா்த்த செருதூா் மீனவா்கள் தங்களிடம் இருந்த ஒரு என்ஜினை கொடுத்து உதவியுள்ளனா். பின்னா் அந்த என்ஜின் உதவியுடன் வெள்ளிக்கிழமை மாலை நாகப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வந்து சோ்ந்தனா். இது குறித்து புகாா் ஏதும் அளிக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com