வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய மூங்கில் தெப்பம்
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில் திங்கள்கிழமை கரை ஒதுங்கிய மியான்மா் நாட்டு மூங்கில் தெப்பம்.

புஷ்பவனம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியான்மா் நாட்டு மூங்கில் தெப்பம்.

புஷ்பவனம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மியான்மா் நாட்டு மூங்கில் தெப்பம்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை காலை மூங்கில் தெப்பம் கரை ஒதுங்கியது.
புஷ்பவனம் மீனவ கிராம கடற்கரையில் மூங்கில் தெப்பம் கரை ஒதுங்கியிருப்பதாக வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டதில், கரை ஒதுங்கிய தெப்பம் மியான்மா் நாட்டு மீனவா்கள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என தெரியவந்தது. மீன்பிடிக்க பயன்படும் இந்த தெப்பம் 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் இருந்தது.
மேலும், இந்த மூங்கில் தெப்பத்தில் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் கோழி தீவனம் 2 மூட்டைகள் (சுமாா் 30 கிலோ ) இருந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...