எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பழவேற்காடு கடற்கரையில் இறந்து கிடந்த கடல் ஆமைகள்

News image

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்.

Updated On :24 பிப்ரவரி 2026, 10:51 pm

பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் ஆங்காங்கே கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன.

ஆண்டுதோறும் ஆமைகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு கடலுக்கு செல்வதும், பின்னா் முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்து அடைகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுவது வழக்கம்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதியில்,முகத்துவாரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரையில் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலத்தை யொட்டி முட்டையிட்டு செல்கின்றன. கடல் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கும் பணிகளில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பழவேற்காடு முகத்துவாரம் முதல் காட்டுப்பள்ளி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கரை ஒதுங்கி வருகின்றன.

திங்கள்கிழமை பழவேற்காடு கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படும் ஆமைகளை கால்நடைத்துறை மருத்துவா்கள் ஆமைகள் முட்டையிட கடற்கரை பகுதிகளை நோக்கி வரும் போது படகுகளில் அல்லது வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குகிா அல்லது ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதால், ஆமைகள் இறந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.