கடலூரில் இன்று(ஏப். 11) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் திடல், வடலூர் நான்குமுனை சந்திப்பு, சேத்தியாத்தோப்பு நான்குமுனை சந்திப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் ஏப். 9 ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஏப். 9 அன்று புதுவை தேர்தலால் கடலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு ஏப். 11 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி இன்று(ஏப். 11) கடலூர் பிரச்சாரத்திற்கு அனுமதி இருந்தும், தவெக தரப்பில் இருந்து பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காக பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கடலூர் பிரசார தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தவெக கூறியுள்ளது.
நேற்று தொண்டர்கள் கூடியதால், விஜய் பிரசாரம் செய்யும் இடத்திற்குத் தாமதமாகச் சென்றதால் காரைக்குடியில் அவர் பேசாமலே சென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK Leader Vijay Cuddalore Campaign Cancelled
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!
வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! விஜய்

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

