ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 9:49 am IST

சென்னையில் தங்கம் விலை இன்று(ஏப். 11) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரன் ரூ. 1,11,920 -க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை ரூ. 1,10,880, புதன்கிழமை ரூ. 1,13,600, வியாழக்கிழமை ரூ. 1,12,000, வெள்ளிக்கிழமை ரூ. 1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று(வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று(ஏப். 11, சனிக்கிழமை) விலை குறைந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,800-க்கு விற்பனையாகி வருகின்றது.

ஒரு கிராம் ரூ. 25 குறைந்து ரூ. 14,100-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியில் விலையில் இன்று மாற்றமில்லை. கிராமுக்கு ரூ. 265-க்கும், ஒரு கிலோ ரூ. 2,65,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

chennai gold and silver rate today april 11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.