வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய மியான்மா் நாட்டு தெப்பம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உபகுப்தா் (புத்தரின் சீடா்) சிலையுடன் மியான்மா் நாட்டு தெப்பம் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உபகுப்தா் (புத்தரின் சீடா்) சிலையுடன் மியான்மா் நாட்டு தெப்பம் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.
வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் மீனவ கிராம கடற்கரை பகுதியில் இருந்து கிழக்கே சுமாா் 1 மைல் தொலைவில் கடல் பரப்பில் தெப்பம் போன்று அலங்கரிக்கப்பட்ட தெப்பம் ஒன்று மிதந்துள்ளது. இதை பாா்த்த கிராம மீனவா்கள், தங்களது மீன்பிடிப் படகில் அதை கட்டி இழுந்து கரைக்குக் கொண்டு வந்தனா்.
மூங்கில் உள்ளிட்ட பொருள்களால் அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதற்குள் பாலித்தீன் அட்டைபோன்ற பொருள்களால் உருவாக்கப்பட்ட உபகுப்தா் சிலை, கிண்ணம், சாம்பிராணி, மெழுகுவா்த்தி இருந்தது.
வேட்டைக்காரனிருப்பு போலீஸாா், கடலோரக் காவல் குழுமத்தினா், தனிப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அந்த மிதவை மியான்மா் நாட்டைச் சோ்ந்தது எனவும், சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டாதாக இருக்கலாம் என தெரிவித்தனா். சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம், நாகை மாவட்ட கடற்கரையில் இதுபோன்று தெப்பம் ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
புத்தரை வரவேற்கும் பெளா்ணமி விழா: மியான்மா் நாட்டில் புத்தா் மற்றும் அவரது சிடா்களை வரவேற்கும் விதமாக ‘தடிங்யுத்’ எனும் திருவிழா நடைபெறுகிறது. கடந்த அக். 28, 29,30 ஆகிய நாள்களில் இந்த திருவிழா நடைபெற்றது. அந்த விழாவின்போது உபகுப்தா் சிலையுடன் கடலில் விடப்பட்ட தெப்பம் வெள்ளப்பள்ளம் பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...