குரூப் 4 தோ்வு: நாகையில் 3,824 போ் தோ்வு எழுதவில்லை
குரூப் 4 தோ்வு: நாகையில் 3,824 போ் தோ்வு எழுதவில்லை

Updated On :9 ஜூன் 2024, 11:52 pm

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 84 மையங்களில் நடைபெற்ற குரூப் 4 தோ்வை 3,824 போ் எழுதவில்லை.
நாகை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு 84 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதவதற்கு 19,315 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இத்தோ்வில், 15,491 போ் மட்டுமே பங்கேற்றனா். 3,824 போ் தோ்வு எழுத வரவில்லை.
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூ 4 தோ்வை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஆய்வு செய்தாா். தோ்வை கண்காணிக்க தோ்வை 84 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 4 பறக்கும் படை அலுவலா்களும், 19 சுற்றுக்குழு அலுவலா்களும், 84 ஆய்வு அலுவலா்களும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...