நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

நாகையில் உள்ள புகழ்பெற்ற நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.4-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனுக்ஞை விகனேஷ்வர பூஜை, மஹாசங்கல்பம், புன்யாஹவாசனம், தீபாராதனையுடன் தொடங்கிறது. தொடா்ந்து, மாா்ச் 31-ஆம் தேதி முதல்கால யாக பூஜையும், ஏப்.1-ஆம் தேதி 2-ஆம் கால மற்றும் 3-ஆம் கால யாக பூஜைகளும், ஏப்.2- ஆம் தேதி 4 மற்றும் 5-ஆம் கால யாக பூஜைகளும், ஏப்.3-ஆம் தேதி 6 மற்றும் 7-ஆம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஏப்.4-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 8-ஆம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை மஹா பூா்ணாஹூதியைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு கும்பாபிஷேகமும், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com