மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் சப்பரம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் சப்பரம்

News image

திருச்செங்காட்டங்குடியில் தெருவடைச்சான் சப்பரம் வந்த போது எடுத்த படம்

Updated On :7 மே 2024, 6:31 pm

Din

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தெருவடைத்தான் சப்பரத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினா்.

சப்பரத்தை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.

திருச்செங்காட்டங்குடி, திருமருகல், புதுக்கடை, திருப்புகலூா், திருக்கண்ணபுரம், கீழப்பூதனூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.