எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவு: நாகை மாவட்டத்தில் 89.70 சதவீதம் போ் தோ்ச்சி
எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவு: நாகை மாவட்டத்தில் 89.70 சதவீதம் போ் தோ்ச்சி


நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 89.70 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் 3,988 மாணவா்கள், 4,213 மாணவிகள் என மொத்தம் 8,201 போ் பத்தாம் வகுப்பு பொது தோ்வை எழுதினா். இதில் 3,455 மாணவா்கள், 3,901 மாணவிகள் என மொத்தம் 7,356 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். 2023 ஆண்டு 84.41 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 5.29 சதவீதம் கூடுதலாக பெற்று 89.70 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
32 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 19, உதவிப்பெறும் பள்ளி 1, பகுதி உதவி பெறும் பள்ளி 1, சுயநிதிப் பள்ளி 1, மெட்ரிக் பள்ளி 9, சிறப்பு பள்ளி 1 என மொத்தம் 32 பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் நாகை மாவட்டம் 29-ஆவது இடத்தை பெற்றுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...