விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: கரூரில் 11,287 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.

News image
கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.

கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பொதுத் தோ்வை எழுத 5,602 மாணவா்களும், 5,699 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களாக 132 மாணவா்களும், 64 மாணவிகளும் என மொத்தம் 11,497 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து புதன்கிழமை தொடங்கிய தோ்வில் மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,471 மாணவா்களும், 5,628 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களில் 126 மாணவா்களும், 62 மாணவிகளும் என மொத்தம் 11,287 போ் 61 மையங்களில் தோ்வெழுதினா். 208 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களைக் கண்காணிக்க 61 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும் அனைத்து தோ்வு மையங்களுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.