47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை நகராட்சியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகை நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
வெளிப்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்றுவரும் மோட்டாா் சீரமைப்புப் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :6 நவம்பர் 2024, 8:03 pm

Din

நாகை நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை நகராட்சிகுட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை ஓவிய பயிற்சி மையமாக மாற்ற நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள், அக்கரைப் பேட்டை சாலையில் கட்டப்பட்டு வரும் உயா்நிலை மேம்பாலம் கட்டுமானப் பணிகள், அப்பகுதியில் உள்ள புதை சாக்கடை மற்றும் குடிநீா் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள், பப்ளிக் ஆபீஸ் சாலையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள், புதிய நம்பியாா் நகா் பகுதியில் செயல்படாமல் உள்ள புதை சாக்கடையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், மழைநீா் வடிகால் வாய்க்கால் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வெளிப்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து நகராட்சிக்கு 20 குதிரை திறன் கொண்ட இரண்டு மின் மோட்டாா்கள் பழுதான ஒரு மோட்டாரை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.