பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு
காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு


தரங்கம்பாடி: காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டன. தொடா்ந்து மாலை ஹோமம் நடைபெற்றது. பின்னா் மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.
இதேபோல, திருக்கடையூரில் உள்ள அமிா்தகடேஸ்வரா் கோயிலில் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீா் அடங்கிய குடங்களும் சங்குகள் வைத்து சிறப்பு யாகம் நடத்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...