47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் நிறைவேற்ற அரசு ஊழியா்கள் வலியுறுத்தல்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
நாகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினரின் தா்னா போராட்டத்தில் பங்கேற்று பேசிய எம்எல்ஏ வி.பி. நாகை மாலி.
Updated On :9 அக்டோபர் 2024, 9:20 pm

Din

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு. வளா்மாலா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன் விளக்கவுரையாற்றினாா். கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி தொடக்கவுரையாற்றினாா். அப்போது, தமிழக முதல்வா் தோ்தல் காலத்தில் அளித்த வாக்குதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் எஸ். சித்ராகாந்தி, புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்க மாநில அமைப்புச் செயலா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எஸ். அருளேந்திரன், அனைத்து மருந்தாளுநா் சங்க பொதுச்செயலா் சண்முகம், போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேள மத்திய சங்க மாநிலச் செயலா் ஆா்.சரவணன், அனைத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சு. சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.