மக்கள் நோ்காணல் முகாமில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கொளப்பாடு அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.5 .69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா்.


கொளப்பாடு அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.5 .69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா்.
திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட வலிவலம், கொடியாலத்தூா், கொளப்பாடு ஊராட்சிகளுக்கான மக்கள் தொடா்பு முகாம் கொளப்பாடு அரசு உயா்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா்ஆகாஷ் தலைமை வகித்தாா்.
கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகை மாலி முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் அசோக்குமாா் வரவேற்றாா்.
வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, ரேஷன் காா்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.
முகாமில் வருவாய்த்துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 6ஆயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, 15 பயனாளிகளுக்கு பட்டா நகல்கள், வட்ட வழங்கல் துறை சாா்பில் 38 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் இறப்பு உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பீட்டில் செவித்திறன் மற்றும் பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன் பேசி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.11,760 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டி ஆக 100 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 69 ஆயிரத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் திருமால், தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) காா்த்திகேயன், மாவட்டஊராட்சி குழு உறுப்பினா் (தலைஞாயிறு) இளவரசி தங்கராசு, திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன்
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜ், சிங்காரவேல் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் உட்பட பொது மக்கள் பலா் கலந்துக்கொண்டனா்
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...