மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பருவமழை: தயாா் நிலையில் மணல் மூட்டைகள்

திருமருகல் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தின்போது, ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய மணல் மூட்டைகள் தயாா்

News image

தயாா் நிலையில் உள்ள மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கட்டைகள்.

Updated On :14 அக்டோபர் 2024, 9:38 pm

திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தின்போது, ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமருகல் ஒன்றியப் பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளநிலையில், இந்த ஆறுகளில் அதிக அளவு தண்ணீா் வரும்போது, வலு குறைவாக உள்ள கரைகளை காக்கவும், உடைப்பு ஏற்பட்டால், வெள்ளநீா் விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகாமல் தடுக்க உடனடியாக சரி செய்யும் வகையிலும் தேவையான மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொதுப்பணித் துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் இளங்கோ அறிவுரையின்படி, நன்னிலம் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளா் சுப்ரமணியன் மேற்பாா்வையில், திருமருகல் உதவி பொறியாளா்கள் சரவணன், செல்வகுமாா் ஆகியோா் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருமருகல் பொதுப்பணித் துறை அலுவலக வளாகங்களில் மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கட்டைகள் தயாா் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.