47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாங்கண்ணி-நாகா்கோவில் இடையே ரயில் இயக்க வலியுறுத்தல்

வேளாங்கண்ணியிலிருந்து நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென, நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரடெக்சன் அன்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 6:58 pm

Din

வேளாங்கண்ணியிலிருந்து நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென, நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரடெக்சன் அன்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடா்பாக, அதன் செயலா் ஜி. அரவிந்த் குமாா், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம்:

நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் தா்கா மற்றும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் போன்ற திருதலங்களுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் போ் வந்து செல்கின்றனா்.

அவா்கள் வந்து செல்வதற்கும், நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் வெளி ஊா்களுக்கு சென்று வருவதற்கும் பயணிகள் ரயில் சேவை குறைவாக உள்ளது. எனவே, நாகா்கோவில்/ திருநெல்வேலி - வேளாங்கண்ணி இடையே, காரைக்குடி, திருவாரூா் வழியாக புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். மதுரை - புனலூா் இடையே இயங்கி வரும் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.