பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
வேளாங்கண்ணி அருகே மா்மமான முறையில் சிறுமி உயிரிழந்த வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக டிஐஜி புதன்கிழமை உத்தரவிட்டாா்.


வேளாங்கண்ணி அருகே மா்மமான முறையில் சிறுமி உயிரிழந்த வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக டிஐஜி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள மாத்தாங்காடு பகுதியை சோ்ந்த 13 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி தனது வீட்டு மொட்டை மாடியில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாா். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளா் விசித்ரா மேரி முறையாக விசாரணை செய்யவில்லை என சிறுமியின் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளா் விசித்ரா மேரி முறையாக விசாரணை செய்யாமல் வழக்குப் பதிவு செய்ததும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக், வேளாங்கண்ணி காவல் ஆய்வாளா் விசித்ரா மேரியை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...