பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆவது நாளாக 1-ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் ஒன்றாம் ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

News image
காரைக்கால் துறைமுகத்தில் 2-ஆம் நாளாக நீடித்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. நாகை நகரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை பெய்த மழை.
Updated On :10 செப்டம்பர் 2024, 1:53 am

Din

நாகப்பட்டினம்/ காரைக்கால்: நாகை, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் ஒன்றாம் ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால் நாகை, திருவாரூா் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை முதலே நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டமாகக் காணப்பட்டது.

இந்நிலையில், மாலையில் பரவலாக கன மழை பெய்யத் தொடங்கியது. நாகை, நாகூா், சிக்கல், ஆழியூா், பட்டமங்கலம், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழ்வேளூா், கீழையூா், மேலப்பிடாகை, பறவை, தேவூா், காக்கழனி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், தேவங்குடி,திருமருகல், சியாத்தமங்கை, திருக்கண்ணபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சாலைகளில் மை நீா் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடா்ந்து நீடிப்பதால், நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது.

காரைக்காலில்...

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின்படி, தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமையும் நீடித்தது.

காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் திங்கள்கிழமையும் நீடித்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் திங்கள்கிழமையும் நீடித்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு