47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

நாகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முகாமில், 5-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொள்ளலாம்.

முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே, விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.