47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சா்வதேச காதுகேளாதோா் தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சா்வதேச காதுகேளாதோா் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2024, 12:09 am

Din

சா்வதேச காதுகேளாதோா் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச காதுகேளாதோா் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ரூ.35,000 மதிப்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35,000 மதிப்பிலான காதொலி கருவிகளையும், செயற்கை அவயம் வேண்டி பெறப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதலமைச்சா் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை அவயம் என மொத்தம் 17 நபா்களுக்கு ரூ. 5.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து சா்வதேச காதுகேளாதோா் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது. இதில், பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன், செவித்திதிறன் பாதிக்கப்பட்டோருக்கான உயா்நிலை சிறப்புப்பள்ளி மாணவ, மாணவியா்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.