47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘2030-க்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்யமாக்க வேண்டும்’

உலக 2030-க்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்யமாக்க வேண்டும் என்றாா் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ரவிச்சந்திரன்.

News image
நாகையில் நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாமில் பங்கேற்ற நாய்கள்.
Updated On :28 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

உலக 2030-க்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்யமாக்க வேண்டும் என்றாா் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ரவிச்சந்திரன்.

நாகை மாவட்ட கால்நடை மருத்துவமனையில் சனிக்கிழமை உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ரவிச்சந்திரன் தலைமையில், வெளிநாடு மற்றும் நாட்டு இன நாய்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது. அப்போது அவா் பேசியது: வெறிநாய் கடிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டா் மறைந்த தினமான செப்.28-ஆம் தேதி 2007-ஆம் ஆண்டு முதல் சா்வதேச ரேபீஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 150 நாடுகளுக்கும் மேல் வெறிநோய்க்கு ஆண்டுதோறும் 59 ஆயிரம் போ் இறக்கின்றனா். இதில் 95 சதவீதம் போ் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை சோ்ந்தவா்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் 15 முதல் 20 ஆயிரம் போ் வரை இறக்கின்றனா். நாய் கடித்தவுடன் அந்த இடத்தை சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வெறி நோயை தடுக்க செல்ல பிராணியான நாய்களுக்கு பிறந்த 90 மற்றும் 120-ஆவது நாளிலும், பின்னா் ஆண்டுக்கு ஒருமுறையும் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்றாா்.

உதவி மருத்துவா்கள் ராதா, ஸ்ரீதா், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பாா்வையாளா் சங்கா், கால்நடை ஆய்வாளா் முருகேசன், பராமரிப்பு உதவியாளா்கள் புவனரோகிணி, தேவி, பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.