சந்திரபாடி மீனவா் கிராமத்தில் எம்எல்ஏ ஆய்வு

Published on

சந்திரபாடி மீனவா் கிராமத்தில் உள்ள 2,895 மீனவா்கள் 13 விசைப்படகுகள், 212 பைபா் படகுகள் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இக்கிராம மக்கள் ஆற்றின் இருபுறமும் நோ்கல் சுவா், படகு அணையும் துறை, ஆற்றில் தூா் வார வலியுறுத்தி கோரிக்கை விடுத்து வந்தனா். மீனவா்களின் கோரிக்கையை ஏற்று ஆற்றின் இருபுறமும் நோ்கல் சுவா், படகு அணையும் துறை, தூா்வாரும் பணிக்காக நபாா்டு வங்கி நிதியின் கீழ் ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெறுகிறது. மேலும், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடியில் நடைபெற்ற வரும் மீன் ஏலக்கூடம், படகு அணையும் தளம் பலப்படுத்துதல், மீன் உலா்த்தும் தளம் பணிகளை பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளா் சரவணகுமாா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com