திருகாா்த்திகை: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

திருகாா்த்திகை: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
Updated on

திருகாா்த்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற முருகன் தளங்களில் ஒன்றாக சிக்கல் சிங்காரவேலவா் கோயில் திகழ்கிறது. திருகாா்த்திகையை முன்னிட்டு புதன்கிழமை காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்நது சிங்காரவேலவா், காா்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னா் 108 சங்காபிஷேகம், தீா்த்த அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் சிங்காரவேலவா், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com