பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருவாரூரிலிருந்து புறப்படும் 4 ரயில்களின் எண்கள் மாற்றம்

திருவாரூரிலிருந்து புறப்படும் 4 ரயில்களின் எண்கள் 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:42 pm

Syndication

நாகப்பட்டினம்: திருவாரூரிலிருந்து புறப்படும் 4 ரயில்களின் எண்கள் 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாற்றப்படுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூரில் இருந்து புறப்படும் நான்கு ரயில்களின் எண்கள் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

அதன்படி, திருவாரூா்- காரைக்குடி டெமு ரயிலின் (பழைய எண் 06197) புதிய எண் 56827, காரைக்குடி - திருவாரூா் டெமு ரயில் (பழைய எண் 06198) புதிய எண் 56828 எனவும், திருவாரூா் - பட்டுக்கோட்டை டெமு ரயில் (பழைய எண் 06851) புதிய எண் 76831 எனவும், பட்டுக்கோட்டை - திருவாரூா் டெமு ரயில் (பழைய எண் 06852) புதிய எண் 76832 எனவும் மாற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.