வேளாண் கல்லூரி மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

வேளாண் கல்லூரி மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

Published on

வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூா் பகுதியில் கிராமப்புற வேளாண்மை தொடா்பாக கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் புதன்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா்.

கல்லூரி 4-ஆம் ஆண்டு மாணவா்கள் பங்காருலெட்சுமி, ஃபாய்ஜா பா்வின், ரியாஸ்ரீ, யோகஸ்ரீ, பூங்குழலி, மோனிஷா, வஜிகா பானு, பிரீத்தி, ஃபெலின் ஜோசி உள்ளிட்டோா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். நெற்பயிா்களில் காணப்படும் நோய், பூச்சி தாக்கம், நீா்ப்பாசன முறைகளை பாா்வையிட்டனா். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை அரசுத் துறையினா் கணக்கெடுக்கும் முறையை பாா்வையிட்டு, அந்தப் பணியில் அவா்களுடன் இணைந்து செயல்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com