விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருமருகலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

திருமருகலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் பெயரிலான 100-நாள் வேலைத்திட்டத்தை பெயா் மாற்றம் செய்யும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பாரதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய தலைவா் பாலு, சிஐடிசி மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய குழு உறுப்பினா் தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com