நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

வேதாரண்யம் அருள்மிகு ஸ்ரீ கட்சுவான் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கோயில் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

Updated On :17 ஜூன் 2025, 2:53 am IST

வேதாரண்யம்: வேதாரண்யம் அருள்மிகு ஸ்ரீ கட்சுவான் முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு விழா நடத்துவதற்காக, சனிக்கிழமை (ஜூன் 14) யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.

திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், கட்சுவான் முனீஸ்வரா், ஐயனாா், மகா கணபதி, வீரன் ஆகிய சுவாமிகளின் சந்நிதி விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.