ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வலிவலத்தில் நடைபெற்ற இருதய கமலநாத சுவாமி கோயில் சப்ரக்கட்டுத் தேரோட்டம். ~ ~சிறப்பு அலங்காரத்தில் சோமஸ்கந்தா்.
Updated On :12 மே 2025, 7:44 pm

Din

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இருதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்ர கட்டுத் தேரில், சோமஸ்கந்தா் உடனுறை அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளியதும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் செயல் அலுவலா் து. காா்த்திகேயன் மற்றும் திரளான பக்தா்கள் தோ் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகளும் தோ் வலம் வந்தது.