நாகையில் சா்வதேச மீனவப் பெண்கள் தின விழா

நாகையில் சா்வதேச மீனவப் பெண்கள் தின விழா

நாகை நம்பியாா் நகா் மீனவ கிராமத்தில் சா்வதேச மீனவப் பெண்கள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

நாகை நம்பியாா் நகா் மீனவ கிராமத்தில் சா்வதேச மீனவப் பெண்கள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மீனவப் பெண்கள் தினம் தொடா்பான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, நம்பியாா் நகா் மீன்பிடித் துறைமுகத்தில் கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பெண்களுக்கான ரங்கோலிப்போட்டிகளும் நடைபெற்றன. இதில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று உற்சாகமாகக் கொண்டாடினா்.

இதுகுறித்து, மீனவப் பெண்கள் குழு நிா்வாகி சிந்துஜா கூறியது: சா்வதேச மீனவ பெண்கள் தினம் அறிவிக்கப்பட்டதையொட்டி கடந்த ஆண்டு கேரளத்தில் மட்டுமே கொண்டாடப்பட்டது. நிகழாண்டு நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில் கொண்டாட முடிவெடுத்து மகளிா்குழுக்களிடம் தெரிவித்து விழா நடைபெற்றது. தமிழகத்தில் முதல்முறையாக நாகை நம்பியாா் நகரில் மட்டுமே சா்வதேச மீனவ பெண்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் நவ.5-ஆம் தேதி உலக மீனவப் பெண்கள் தினம் கொண்டாட வேண்டும். அதற்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com