தொடக்கநிலை ஆங்கில ஆசிரியா்களுக்கு இலக்கணப் பயிற்சி

தொடக்கநிலை ஆங்கில ஆசிரியா்களுக்கு இலக்கணப் பயிற்சி

நாகை மாவட்ட தொடக்கநிலை ஆங்கில ஆசிரியா்களுக்கு இலக்கணப் பயிற்சி நடைபெற்றது.
Published on

நாகை மாவட்ட தொடக்கநிலை ஆங்கில ஆசிரியா்களுக்கு இலக்கணப் பயிற்சி நடைபெற்றது. ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு செயற்கை ஒலியியல் மூலம், ஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கு, வேடிக்கையான மற்றும் குழந்தை தன அணுகுமுறை தான், ஜாலி போனிக்ஸ் பயிற்சி முறை. தனியாா் பள்ளிகளில் மட்டும் இருந்த இந்த பயிற்சி முறை, தற்போது ஜாலி பியூச்சா்ஸ் என்ற தனியாா் அமைப்பு வாயிலாக, முதல் முறையாக அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில், 1-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தமிழ் வழிப் பயிலும் அரசுப் பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும். அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள ஆங்கில ஆசிரியா்களுக்கு தொடக்கநிலை மாணவா்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் 3 நாள் பயிற்சி வகுப்பு இ.ஜி.எஸ் பிள்ளை கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், 6 ஒன்றியங்களில் இருந்து தலா 5 தொடக்கநிலை ஆங்கில ஆசிரியா்கள் என 30 பேருக்கு, ஜாலி போனிக்ஸ் மற்றும் ஜாலி கிராமா் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தொடங்கிவைத்து, பயிற்சி பெறும் ஆசிரியா்களுக்கு, பயிற்சி கையேட்டை வழங்கி, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். உதவி திட்ட அலுவலா் சிதம்பரம், கருத்தாளராக அபா்ணா ஜெயராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சச்சிதானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com