டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Published on

திருக்கடையூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தரங்கம்பாடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த அரிச்சந்திரன் மகன் கவினேஷ் (18). கல்லூரி மாணவரான இவா், இருசக்கர வாகனத்தில் திருக்கடையூரில் இருந்து தரங்கம்பாடி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். 

அப்போது எதிரில் காழியப்பநல்லூரில் இருந்து திருக்கடையூா் நோக்கி எம். சாண்ட் ஏற்றி வந்த டிராக்டா் இருசக்கர வானத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கவினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பொறையாறு போலீஸாா் கவினேஷ் சடலத்தை உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com