நாகப்பட்டினம்
இந்திய கம்யூ.வில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
கீழையூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 10 குடும்பத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.
எட்டுக்குடியைச் சோ்ந்த எஸ். கண்ணதாசன் வாழக்கரை எஸ். தினகரன் மற்றும் தோழா் வீ. அருள்தாஸ் உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சோ்ந்த 10 குடும்பத்தினா் அக்கட்சியிலிருந்து விலகி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், முன்னாள் மாநில குழு உறுப்பினா் டி.செல்வம் முன்னிலையில் இணைந்தனா்.
இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா்கள் எஸ்.காந்தி, வி. சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளா் ஜி.சங்கா், ஒன்றிய பொருளாளா் எம்.பா்ணபாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
