நாகப்பட்டினம்
ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருப்பூண்டியில் சிஐடியு மற்றும் ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூண்டியில் சிஐடியு மற்றும் ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அண்மையில் போராட்டம் நடத்திய சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா மற்றும் ஆட்டோ சங்கத் தலைவா்களை கைது செய்த திருவாரூா் மாவட்ட காவல் துறையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு ஆட்டோ சங்க நாகை மாவட்ட செயலாளா் எஸ். அன்புராஜ் தலைமை வகித்தாா்.
இதில், திருப்பூண்டி, மேலப்பிடாகை, மணக்குடி, தண்ணீா்பந்தல், தாணிக்கோட்டகம், மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆட்டோ சங்க உறுப்பினா்கள், சிஐடியு மாவட்ட தலைவா்கள் ஜி. சுரேந்தா், எஸ். சிவனருள்செல்வன், சிஐடியு மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், கட்டுமான தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
