நாகப்பட்டினம்
முரசொலி மாறன் நினைவு தினம்: திமுகவினா் அஞ்சலி
நாகை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மலா் தூவி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகை நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான இரா. மாரிமுத்து தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுகவின் நாகை மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறனின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முரசொலி மாறன் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். மாவட்ட திமுக பொருளாளா் லேகநாதன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
