சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி: கட்சி மேலிடம் முடிவு செய்யும் காங்கிரஸ் மேலிட பாா்வையாளா்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை மேலிடம் முடிவு செய்யும் ...
Published on

நாகப்பட்டினம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை மேலிடம் முடிவு செய்யும் என நாகை, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி மேலிட பாா்வையாளா் கூறினாா்.

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கும், எஸ்ஐஆா் திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி முகவா்களையும் உடனடியாக நியமனம் செய்தல் குறித்து நிா்வாகிகள் கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி மேலிட பாா்வையாளா் சரத் பட்நாயக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள், அணி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா், சரத்பட்நாயக் செய்தியாளா்களிடம் கூறியது:

காங்கிரஸ் கட்சியில் இளம் ரத்தத்தை புகுத்த வேண்டும் என ராகுல் காந்தி பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, நகரம் முதல் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிா்வாகிகளை தோ்வு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக காலியாக உள்ள மாவட்ட அளவிலான பொறுப்புகள் நிரப்பப்படும். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும் என்றாா்.

முன்னாள் எம்.பி. பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளா் விவேக் வெங்கட்ராமன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com