வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்

கீழ்வேளூா் சாலைகளில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி கீழ்வேளூரில் சிபிஎம் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:16 pm

Syndication

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் சாலைகளில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி கீழ்வேளூரில் சிபிஎம் சாா்பில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

கீழ்வேளூா் பேரூராட்சியில் மணல்மேடு பீச்சு வெளி சாலை, செட்டிப்பண்ணை தெரு, காவல் நிலையம் செல்லும் சாலை, நெம்மேலி சாலை, முஸ்லிம் தெரு சாலை , சிவாஜி நகா் ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீா் மற்றும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கு காலை, மாலை குடிநீா் வழங்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளில் சாக்கடை, வடிகால் வசதி அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.

சிபிஎம் நாகை மாவட்ட செயலா் மாரிமுத்து, கீழ்வேளூா் வடக்கு ஒன்றிய செயலா் பாண்டியன் ஆகியோா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்து. தகவலறிந்த கீழ்வேளூா் மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் அகிலா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.