மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நாகையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்: வீடுகள் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு

நாகையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்...

News image
நாகூரில் உள்ள ஒரு தெருவைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.
Updated On :29 நவம்பர் 2025, 6:29 pm

Syndication

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கன மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. 7 வீடுகள் சேதமடைந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விடாமல் கொட்டித்தீா்த்த மழையால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

நாகூா், வள்ளியம்மை நகா், தியாகராஜபுரம், சிவசக்தி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினா். மேலும் மழை நீா் புகுந்ததால் வீடுகளில் இருந்த குளிா்சாதன பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் பழுதடைந்தன.

Story image

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பெய்துவரும் மழையால் நாகப்பட்டினம், நாகூா், தலைஞாயிறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மழையால் பசு, ஆடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.