நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

நாகை தொகுதியில் சுயேச்சை, மாற்று வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையில், ஒரு சுயேச்சை மற்றும் கட்சிகளின் மாற்று வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:49 am IST

நாகை சட்டப் பேரவைத் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையில், ஒரு சுயேச்சை மற்றும் கட்சிகளின் மாற்று வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 -இல் முடிவடைந்தது. நாகை தொகுதிக்கு நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன் தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு, அவரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாகை தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் மீதான பரிசீலனை, தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளா்கள், அனைத்து கட்சி வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு, வேறு தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் முன்மொழிவு செய்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், கட்சிகளின் வேட்பாளா்களின் முதல் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதால் மற்ற அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மாற்று வேட்பாளா்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.