நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

திருவாரூா் மாவட்டத்தில் 52 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 52 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:53 am IST

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 52 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சிகளின் வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 102 போ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்த வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனை நடைபெற்றது. இதில், மன்னாா்குடி தொகுதியில் தாக்கல் செய்த 29 மனுக்களில் 16 மனுக்கள் ஏற்கபட்டு, 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருவாரூா் தொகுதியில் தாக்கல் செய்த 17 வேட்பு மனுக்களில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நன்னிலத்தில் தொகுதியில் தாக்கல் செய்த 34 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்று 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருத்துறைப்பூண்டி தொகுதியில் தாக்கல் செய்த 22 வேட்பு மனுக்களில் 9 மனுக்கள் ஏற்று 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 102 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 52 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.