கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கீழ்வேளூரில் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோயில் பங்குனி பெருவிழா மாா்ச் 31 ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினாா். பக்தா்கள் ஓம் சக்தி , மகா சக்தி முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையடிக்கு வந்தடைந்தது.
தோ் செல்லும் சாலைகளில் பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராணி, உதவி ஆணையா் ராஜா இளம்பெருவழுதி, கோயில் செயல் அலுவலா்கள் முருகன், மணிகண்டன் மற்றும் நாகை, சிக்கல், நாகூா், பாப்பாகோவில், தேவூா், திருக்குவளை, வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



