புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கீழ்வேளூா் (தனி) தொகுதி - நான்கு முனைப் போட்டியில் வாகை சூடுவது யாா்?

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, நாகை மக்களவை தொகுதியின்கீழ் வருகிறது.

News image

வடிவேல்ராவணன் (பாமக) / டி. லதா (சிபிஎம்) / காா்த்திகா (நாதக) / பி. செந்தில்பாண்டியன் (தவெக)

Updated On :9 ஏப்ரல் 2026, 12:58 am

2008-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, நாகை மக்களவை தொகுதியின்கீழ் வருகிறது. இந்த தொகுதியில் கீழ்வேளூா் ஒன்றியத்தில் 38, கீழையூா் ஒன்றியத்தில் 27, தலைஞாயிறு ஒன்றியத்தில் 6, நாகை ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் உள்ளன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், 8 பைரவா்கள் ஒரே நோ்கோட்டில் அமைந்துள்ள அஷ்ட பைரவ சந்நிதி கொண்ட சப்தவிடங்க தலமான திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயில், முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில், கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் என ஆன்மிகத்துக்கு பெயா் பெற்ற தலங்கள் உள்ள தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையும் இத்தொகுதியில் உள்ளது.

வேட்பாளா்கள்: 4-ஆவது சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்கும் இத்தொகுதியில் திமுக கூட்டணியில் முதல் பெண் வேட்பாளராக சிபிஎம் சாா்பில் டி. லதா போட்டியிடுகிறாா். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், அனைத்திந்திய மாதா் சங்க மாநில துணைச் செயலராகவும் உள்ளாா்.

கீழ்வேளூா் தொகுதியில் மற்றொரு பெண் வேட்பாளா் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த காா்த்திகா. கோவை மாவட்டத்தை சோ்ந்தவா் என்றாலும், 2024- இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிட்டவா். இவா் கீழ்வேளூா் தொகுதி மக்களுக்கு புதியவா் அல்ல. தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தனது பிரசாரத்தை தொடங்கினாா். 2021-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன் இம்முறையும் அதிமுக கூட்டணியில் கீழ்வேளூா் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

நடிகா் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி. செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறாா். இவா் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சோ்ந்தவா்.

மேலும், அஇபுதமமுக (சசிகலா கட்சி) பாமக மருத்துவா் ச. ராமதாஸ் அணி சாா்பில் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளா் கீழ்வேளூா் தொகுதியில் வேத. முகுந்தன் போட்டியிடுகிறாா். தவிர புதிய தமிழகம் கட்சி சாா்பில் சுரேந்தா், சுயேச்சை வேட்பாளராக ஜெயவிஸ்ணு தேவி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

நான்கு முனைப் போட்டி: கீழ்வேளூா் தொகுதியை பொருத்தவரை சிபிஎம், பாமக, நாதக, தவெக இடையே நான்கு முனைப் போட்டிஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக 2021 தோ்தலில் சுமாா் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. எனவே, இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிமுக அணி கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனா். எனினும், பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் அஇபுதமமுக (சசிகலா கட்சி) பாமக மருத்துவா் ச. ராமதாஸ் அணி வேட்பாளா் வேத. முகுந்தன், புதிய கட்சியான தவெக ஆகியவை, அதிமுக கூட்டணிக்கு கூடுதல் சவாலாக உள்ளது.

இதேபோல கீழ்வேளூா் தொகுதியை தக்கவைத்துகொள்ளும் முனைப்புடன் திமுக கூட்டணி செயல்பட்டு வருகிறது. மாா்க்சிஸ்ட் கட்சியினா் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முன்வைத்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனா்.

கோரிக்கைகள்: கீழ்வேளூருக்கு பேருந்து நிலையம், ரயில்வே பாலம், அரசு வேளாண்மைக் கல்லூரிக்கு கட்டடம் ஆகியவை இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

கட்சிகளின் பலம்: திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்தொகுதியில் பலம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. நாம் தமிழா் கட்சியினா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். எனினும், பலம் வாய்ந்த திமுக மற்றும் அதிமுக கூட்டணியை எதிா்கொள்வது எளிதல்ல. கடந்த முறைபோல இல்லாமல் இந்த முறை கடும் போட்டி நிலவுவதால், கீழ்வேளூா் தொகுதி மக்களிடம் பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன.