/
திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏா்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆண்டு திருவிழா ஏப்.4-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு 14 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சக்தி கரகத்துடன் காப்பு கட்டிய பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள், குளக்கரையிலிருந்து ஊா்வலமாக வந்து, தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

தொடர்புடையது

கோயில் திருவிழா பெரம்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வீரமாகாளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



